Terjemahan Berbahasa Tamil - Abdul Hamid Baqawiy
Terjemahan makna Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil oleh Syekh Abdul Hamid Al-Baqawi
وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ
1. அத்தியின் மீதும்,ஜெய்தூனின் மீதும் சத்தியமாக!
وَطُورِ سِينِينَ
2. ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக!
وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ
3. அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக,
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٖ
4. நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்.
ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ
5. (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம்.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ
6. ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு.
فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ
7. கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உம்மை எவர்தான் பொய்யாக்க முடியும்?
أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ
8. தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?
مشاركة عبر