الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة
ترجمة معاني القرآن الكريم
ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ
(யுக முடிவில்) வானம் பிளந்துவிடும் போது,
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ
இன்னும் நட்சத்திரங்கள் விழுந்து சிதறும் போது,
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ
இன்னும் கடல்கள் பிளக்கப்ப(ட்)டு (ஒன்றோடு ஒன்று கலக்கப்படு)ம் போது,
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ
இன்னும் சமாதிகள் புரட்டப்படும்போது (அதில் உள்ளவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது),
عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ
ஓர் ஆன்மா, தான் முற்படுத்தியதையும் (-முன்னர் செய்ததையும்), பிற்படுத்தியதையும் (-இறுதியாக செய்ததையும்) அறியும்.
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ
மனிதனே! கண்ணியவானாகிய உன் இறைவனைப் பற்றி உன்னை ஏமாற்றியது எது?
ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
(அவன்தான்) உன்னைப் படைத்தான்; இன்னும் உன்னைச் சீர்செய்தான்; இன்னும் உன்னை (தான் விரும்பிய உருவத்திற்கு) திருப்பினான்.
فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ
எந்த உருவத்தில் நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான்.
كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
அவ்வாறல்ல, மாறாக, கூலி கொடுக்கப்படுவதை (விசாரணை நாளை)பொய்ப்பிக்கிறீர்கள்.
وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ
நிச்சயமாக (உங்கள் செயல்களை கண்காணித்து பதிவு செய்கிற வானவக்) காவலர்கள் உங்களிடம் இருக்கிறார்கள்.
كِرَامٗا كَٰتِبِينَ
(அவர்கள்,) கண்ணியமானவர்கள், எழுதுபவர்கள்.
يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ
நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள் (பிறகு அதைப் பதிகிறார்கள்).
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ
நிச்சயமாக நல்லோர் ‘நயீம்’ என்ற சொர்க்கத்தில்தான் இருப்பார்கள்.
وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ
நிச்சயமாகத் தீயோர் ’ஜஹீம்’ என்ற நரகத்தில்தான் இருப்பார்கள்.
يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ
கூலி (வழங்கப்படும்) நாளில் அதில் (நரக நெருப்பில்) எரிவார்கள்.
وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ
இன்னும் அவர்கள் அதிலிருந்து மறைபவர்களாக (தூரமாகக் கூடியவர்களாக) இல்லை. (நரகத்திலிருந்து அவர்களால் தப்ப முடியாது.)
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
இன்னும் (நபியே!) கூலி நாள் (விசாரணை நாள், தீர்ப்பு நாள்) என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?
ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
பிறகு, கூலி நாள் என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ
ஓர் ஆன்மா, (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் உரிமை பெறாத நாள் (அது). அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே!
شارك عبر