الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة
ترجمة معاني القرآن الكريم
ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.
وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ
அத்தி மரத்தின் மீது சத்தியமாக! ஸைய்த்தூன் மரத்தின் மீது சத்தியமாக
وَطُورِ سِينِينَ
சினாய் மலையின் மீது சத்தியமாக!
وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ
அபயமளிக்கக்கூடிய இந்த நகரத்தின் மீது சத்தியமாக!
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٖ
திட்டவட்டமாக, மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்தோம்.
ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ
பிறகு, தாழ்ந்தோரில் மிகத் தாழ்ந்தவனாக (மாறும் நிலைமைக்கு) அவனைத் திருப்பினோம்.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ
நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைத் தவிர. ஆகவே, அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு.
فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ
(இத்தனை சான்றுகளுக்குப்) பின்னர், மார்க்கத்தில் உம்மை யார்தான் பொய்ப்பிப்பார்?
أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ
தீர்ப்பளிப்பவர்களில் மிகமேலான தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் இல்லையா?
شارك عبر